ஜெர்மன் மொழியின் வரலாறு

ஜெர்மன் மொழியின் வரலாறு

Blog Single

இந்தோ-ஜெர்மானிய மொழிகளின் மிக முக்கியமான குழுக்களில் ஜெர்மனும் ஒன்றாகும். இது ஜெர்மனி, ஆஸ்திரியா, லிச்சென்ஸ்டீன், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. இம்மொழியின் வரலாறு, ஆரம்பகாலத்தின் இடைப்பகுதியில் உருவான ஜெர்மன் ஒலியியல் பேச்சு வழக்கின் மூலம் தோன்றியது. இடம்பெயர்வு காலத்தில், பண்டைய ஜெர்மன் பேச்சு வழுக்கு சொற்கள் பண்டைய ஆங்கில வார்த்தைகளிலிருந்து பிரிக்கப்பட்டன. 

பண்டைய ஜெர்மன் மொழியின் ஆரம்பகால சான்றுகள், கி.பி 6 ஆம் நூற்றாண்டில் அங்கும் இங்குமாக கிடைக்கப்பெற்ற எல்டெர் ஃபுதார்க்கின் கல்வெட்டு எழுத்துவடிவங்களிலிருந்து அறியப்பட்டவை ஆகும். மிகப் பழமையான ஒத்தகால நூல்கள் (ஹில்டெபிராண்ட்ஸ்லைட், மஸ்பில்லி மற்றும் மெர்செர்க் இன்காண்டேஷன்ஸ்) 9 ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்கின்றன.

பல நாற்றாண்டுகளுக்கு முன்னர், ஜெர்மனி பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. புனித ரோமானிய சாம்ராஜ்யத்திற்குள், ஜெர்மானிய மொழி பேசும் பகுதி அலெமானிக், பவேரியன், ஃபிரான்கிஷ், சாக்சன் மற்றும் ஃப்ரிஷியன் என பிரிக்கப்பட்டது. அக்கால எழுத்தாளர்கள் மிக முக்கியமான பகுதியினரால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுத முயன்றனர். இதுவே மொழியை ஒன்றிணைப்பதற்கான ஒரு முக்கியமான பாதையாக இருந்தது.

ஜெர்மன் மொழியின் வரலாற்றில் மூன்று முக்கிய காலங்கள்:

  1. பண்டைய ஜெர்மன் (750 நூற்றாண்டு முதல் 1050 நூற்றாண்டு வரை);
  2. இடைக்கால ஜெர்மன் (1050 நூற்றாண்டு முதல் 1500 நூற்றாண்டு வரை);
  3. நவீன ஜெர்மன் (1500 நூற்றாண்டு முதல் 1500 தற்போது வரை).

ஆரம்பக் காலத்தில், நிலையான மொழி ஏதும் இருக்கவில்லை. இந்த அமைப்பின் உருவாக்கம் ஜெர்மன் ஒலியியல் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டது. இந்த ஒலி மாற்றத்தின் முடிவுகள் என்னவென்றால், ஜெர்மனியின் விசித்திரமான மெய் அமைப்பு மற்ற எல்லா மேற்கு ஜெர்மானிய மொழிகளிலிருந்தும் வித்தியாசமாக உள்ளது. ஆனால் பழைய ஜெர்மன் மொழியின் இலக்கண முறை பழைய ஆங்கிலம், பழைய டச்சு மற்றும் பழைய சாக்சன் ஆகியவற்றுடன் மிகவும் பொதுவானது என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வலியுறுத்தப்படாத எழுத்துக்களில் உயிரெழுத்துக்களைக் குறைப்பதன் காரணமாக ஜேர்மனியின் ஊடுருவக்கூடிய இலக்கணத்தை எளிமைப்படுத்தியது. அதனால்தான் 1050 இடைக்கால ஜெர்மனின் தொடக்கமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இடைப்பட்ட காலகட்டத்தில், ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியான எழுத்துருவைக் கொண்ட தகவல் தொடர்பு அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டது, ஆனால் மத்தியகால ஜெர்மனில் நிலையான எழுத்து வடிவம் இல்லை. இடைக்கால  ஜெர்மனியின் சில கிளைமொழிகளின் வெவ்வேறு கலவையானது வகையில் லத்தீன் மொழியை மாற்றியமைத்தது, அவை அந்த இடத்தின் உத்தியோகபூர்வ எழுத்துக்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ரோமானிய எழுத்துக்களுக்குள் கோதிக் சிற்றெழுத்து உரைகள் பயன்படுத்தப்பட்டன.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  1. உயிரெழுத்து நீள வரம்பின்மை;
  2. உம்லேட்டெடு(ஜெர்மன் குறியீடு)உயிரெழுத்துக்களுக்கு நீள வரம்பின்மை;
  3. அசல் உரையினுள் /j/ மற்றும் /w/ போன்ற உயிரெழுத்துகளைப் பயன்படுத்துதல் 

இடைக்கால சாக்சன் மொழி சுமார் 1100 முதல் 1500 வரை பேசப்பட்டது, இது மேற்கு பிற்கால சாக்சன் மற்றும் கிழக்கு பிற்கால சாக்சன் என பிரிக்கப்பட்டது. அண்டை மொழிகளான மேற்குக்குள் மத்திய டச்சு மற்றும் தெற்கில் மத்திய ஜெர்மன் ஆகியவைகளுக்கு பின்னர் ஆரம்பகால புதிய ஜெர்மன் மாற்றாக அமைந்தது.

புதிய ஜெர்மனியின் ஆரம்பகாலம் மார்ட்டின் லூதரின் பைபிள் மொழிபெயர்ப்புடன் தொடங்கியது (1522-இல் புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டவுடன், பழைய ஏற்பாடு, 1534-இல் நிறைவடைந்தது). இந்த பணியானது ஏற்கனவே மேம்பட்ட மொழியை ஆதரித்ததுடன், அந்த சமயத்தில் பரவலாகவும் புரிந்து கொள்ளப்பட்டது.

பைபிளின் நகல்கள், ஒவ்வொரு மண்டலத்திலும், அந்தந்த மண்டல பேச்சு வழக்கின்படி மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கேள்விப்படாத வார்த்தைகளுடன் நீட்டிக்கப்பட்ட பட்டியல் கொண்டிருந்தன. ரோமன் கத்தோலிக்கர்கள், ‘ப்ராடஸ்டண்ட் ஜெர்மனி’லிருந்து சிறிதளவே மாறுபட்ட சிறு விவரங்களுடன் தங்கள் சொந்த கத்தோலிக்க தரநிலையை அமைக்க முயன்றனர். பரந்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த தரநிலை, முந்தைய புதிய ஜெர்மனில் முண்ணணி வகித்தது.

1800ஆம் ஆண்டு வரை நிலையான ஜெர்மன் பெரும்பாலும் எழுத்து வடிவ தகவல் பரிமாற்றமாக இருந்து வந்தது. 18ஆம் நூற்றாண்டில், பல்வேறு தலைசிறந்த எழுத்தாளர்கள் நிலையான நவீன ஜெர்மனுக்கு தேவாலயம் மற்றும் மாநிலம், கல்வி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் உபயோகிக்கும்படி அதற்கு நவீன வடிவத்தை அளித்தனர். எழுத்து வடிவ நிலைப்படுத்தல் முறையே பேசப்படும் ஜெர்மனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மற்றும் அது கல்வி, தியேட்டர் மற்றும் ஒலிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. உச்சரிப்பில் மட்டுமல்லாமல் இலக்கணத்தாலும் குறிப்பிடத்தக்க அளவு நிலையான ஜெர்மனிலிருந்து மாறுபடும் பல்வேறு ஜெர்மன் பேச்சு வழக்குகள் இருந்து வருகின்றன. 

 க்ரிம் சகோதரர்களின் முதல் அகராதி, ஜெர்மன் சொற்களஞ்சியத்தின், முதன்மை விரிவான வழிகாட்டியாக இருந்து வருகின்றது. இது 1852 முதல் 1860வரை 16 பாகங்களாக வெளியிடப்பட்டது.

1880இல் டுடென் கையேட்டில், முதன் முதலில் இலக்கண மற்றும் எழுத்துக் கூட்டுமுறை விதிகள் தென்பட்டன. 1901இன் பிந்தைய பகுதியில் ஜெர்மனின் தர நிர்ணயமாக இது அறிவிக்கப்பட்டது. 1996இல் ஜெர்மன் எழுத்தாக்கச் சீர்திருத்தம் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசு பிரதிநிதிகளால் அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்படும் வரை நிலையான ஜெர்மனின் எழுத்துக் கூட்டு முறை 1998 வரை சரிபார்க்கப்படாமல் இருந்தது.

ஜெர்மனின் வேர்கள்

பிற்கால மற்றும் ஜெர்மன்

ஜெர்மன், இந்தோ-ஐரோப்பிய ஜெர்மன் கிளையிலிருந்து (ஆங்கிலம், டட்ச், ஸ்காண்டினேவியன் மற்றும் தற்போது வழக்கத்தில் இல்லாத கோதிக்) இரண்டாம் ஜெர்மனிய ஒலி மாற்றம் என்று அழைக்கப்படும் ஒலி மாற்றத்தினால் பிரிந்தது. அதன் விளைவை இப்போதும் நவீன ஜெர்மன் வார்த்தைகளை அதன் ஆங்கில  மரபு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது  காணலாம்; உதாரணமாக. pound>Pfund; pipe>Pfeife; hope>hoffen; apple>Apfel போன்றவை.


இரண்டாம் ஒலி மாற்றம் ஜெர்மனை சிறிய வடக்குப் பகுதி (ஒலி மாற்றமின்றி) மற்றும் பெரிய மத்திய மற்றும் தென் பகுதி (ஒலி மாற்றத்துடன்) என்று பிரிக்கிறது. வடக்கு ஜெர்மனின் தென் கிழக்குப் பகுதியில் இரண்டாம் ஒலி மாற்றம் இல்லை என்பதால் அவர்களது மொழி ஜெர்மனிலிருந்து தனிப்படுத்தப்பட்டு முந்தைய ஜெர்மன் என்று அழைக்கப்படுகிறது. 

ஜெர்மன், பெரும்பாலும் இயல்பாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் பல்வேறு பேச்சு வழக்குடன் வருகிறது; நெதர்லாந்துக்குள் டட்ச் மற்றும் அதன் பெல்ஜியன் வகை ஃப்ளெமிஷ் அதிகாரப்பூர்வ மொழியாகும் மற்றும் பெல்ஜியமில் ( ஜெர்மனியின் வடக்குப் பகுதியைச் சார்ந்த பிந்தைய ஜெர்மன் மொழிக்கு நெருக்கமான தொடர்புடையது); டச்சுக் குடியிருப்பாளர்களால் பேசப்பட்ட டச்சிலிருந்து உருவான ஆஃப்ரிகான்ஸ் தென் ஆப்பிரிக்காவின் அரசியல் மொழியாகும்; மத்திய ஜெர்மன் பேச்சு வழக்கிலிருந்து உருவாக்கப்பட்ட மற்றும் தற்போது உலகில் பல மில்லியன் யூதர்களினால் பேசப்பட்டு வரும் லக்ஸம்போர்கிஷ் (பிந்தைய ஜெர்மனிலிருந்து) லக்ஸம்போர்க் மற்றும் இட்டிஷின் அரசியல் மொழியாகும்.

முற்கால, மத்திய மற்றும் நவீன ஜெர்மன் 

வரலாற்று பூர்வமாக, ஜெர்மன் மூன்று முக்கிய காலங்களாகப் பிரிக்கப்படுகிறது: முற்கால ஜெர்மன் (கி.பி 750 முதல் கி.பி 1050 வரை): இடைக்கால ஜெர்மன்  (கி.பி.1050 முதல் கி.பி. 1500 வரை) மற்றும் நவீன ஜெர்மன் (கி.பி. 1550 முதல் தற்போது வரை). தற்போது கிடைத்துள்ள பதிவுகளின் படி ஜெர்மன் கி.பி. 750 வரை இட்டுச் செல்கிறது. ஆரம்ப காலத்தின் போது, உள்ளூர் பேச்சு வழக்கு எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது மற்றும் எந்த நிலையான மொழியும் இருக்கவில்லை. மத்திய காலத்தினிடையே 14ஆம் நூற்றாண்டில், புனித ரோமானிய சாம்ராஜ்யத்தின் பல்வேறு தலைமைகளுக்குப் பிறகு, அரசாங்க எழுத்துக்களை அது வரை ஆதிக்கம் செய்து லத்தீன் மொழிக்குப் பதிலாக, இடைக்கால ஜெர்மனின் குறிப்பிட்ட சில பேச்சு வழக்கின் கலவையாக, அரசாங்கத்தில் ஒரே மாதிரியான எழுத்து வடிவத் தகவல் பரிமாற்றமாக உருவாக்கப்பட்டது. 

லூதரின் பைபிள் மொழிபெயர்ப்புக்கு சேக்ஸானி தலைமையின் ஜெர்மன் தழுவப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு பேச்சு வழக்குகளிடையே தலைமையதிகாரிகளின் மொழியே அடிப்படை விதியாகக் கருதப்பட்டதும், லூதர் அதன் மூலம் அவரது பணி அதிக மக்களைச் சென்றடையும் என்று கருதியதுமே அவர் அதனைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாகும்.

நவீன கால ஜெர்மன் லூதரால் உபயோகப்படுத்தப்பட்டதிலிருந்து துவங்கியது. அதுவே தற்கால ஜெர்மன் அல்லது நவீன நிலையான ஜெர்மன் உதித்ததன் காரணம் எனலாம். எழுத்து வடிவ ஜெர்மனில் சீர்த்தன்மை ஏற்பட லூதரைப் போலவே அதிக வாசகர்களை ஈர்க்க முயன்ற பதிப்பாளர்களும் உதவியாக இருந்தனர். 

18ஆம் நூற்றாண்டின் போது, தலை சிறந்த எழுத்தாளர்கள் பலர் குறிப்பாக தற்போது நடைமுறையிலிருக்கும் நவீன நிலையான ஜெர்மனுக்கு உருக்கொடுத்தனர். இதுவே இன்றைய தேவாலய மற்றும் மாநில, கல்வி மற்றும் இலக்கிய மொழியாக உள்ளது. அதே போல எழுத்து வடிவ தரத்தின் தாக்கத்திற்கு ஆட்பட்ட பேச்சு வடிவ ஜெர்மன் கல்வி, தியேட்டர் மற்றும் ஒலிபரப்பிற்கு உபயோகிக்கப்படுகிறது.

ஜெர்மன் மற்றும் முந்தைய ஜெர்மன் பகுதி ஆகிய இரண்டின் பேச்சு வழக்கில் வித்தியாசம் தென்பட்டாலும், சீரான எழுத்துத் தரத்திற்கான சில காரணங்கள் பரவலான ஒலிபரப்பு, சமுதாயத்துடனான அதிகத் தொடர்புத்தன்மை மற்றும் அதிகரித்து வரும் சமூக பொருளாதார மாற்றங்கள் என யூகிக்கப்படுகிறது.


ஜெர்மன் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு

கூற்றுகள் மற்றும் புள்ளி விவரங்கள்

  1. இடம்: ஆஸ்ட்ரியா 784 கிமீ, பெல்ஜியம் 167 கி.மீ, செக் குடியரசு 646 கி.மீ, டென்மார்க் 68 கி.மீ, ஃப்ரான்ஸ் 451 கி.மீ, லக்ஸம்பர்க் 138 கிமீ, நெதர்லாந்து 577 கிமீ, போலாந்து 456 கி.மீ, ஸ்விட்சர்லாந்து 334 கி.மீ எல்லைக்குட்பட்ட மத்திய ஐரோப்பா.
  2. தலைநகரம்: பெர்லின்
  3. வானிலை: மிதம் மற்றும் கடல் சார்ந்தது; குளிர்ச்சி, மூட்டம், ஈரமான குளிர்காலம் மற்றும் கோடைக்காலம்; அவ்வப்போது மிதமான சூடு
  4. மலை (ஃபேஹ்ன்) காற்று
  5. மக்கள் தொகை: 82 மில்லியன் (2019 வரை)
  6. இனக் கலவை: ஜெர்மன் 91.5%. துருக்கியர்கள் 2.4%, பிறர் 6.1% (பெரும்பாலும் கிரேக்கர், இத்தாலியர், போலந்தியர், ரஷ்யர், செர்போ கொரேஷியர் , ஸ்பெயினைச் சார்ந்தவர்கள்)
  7. மதங்கள்: ப்ராடஸ்டன்ட் 34%, ரோமன் கத்தோலிக்கர் 34%, முஸ்லிம் 3.7%, எதையும் சாராத அல்லது பிறர் 28.3%
  8. அரசு: கூட்டிணை அரசு
  9. வர்த்தகக் கலாச்சாரம்: வர்த்தக கலாச்சாரப் பின்னல் குறியீடு™-ற்கு உட்பட்டு 11 ஆவது இடம். 

ஜெர்மனிய சமூகம் மற்றும் கலாச்சாரம் 

திட்டமிடப்பட்ட கலாச்சாரம்

  1. பல விதங்களில், பெரும்பாலும் ஜெர்மனியர் வடிவமைப்பதில் வல்லுனர்கள் எனக் கருதப்படுபவர்கள். 
  2. முற்போக்குச் சிந்தனை மற்றும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதை மதிக்கும் கலாச்சாரம்.
  3. ஒருவரின் வர்த்தக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், கவனமான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை அளிப்பது. 
  4. விதிமுறைகள் மற்றும் வரைமுறைகள் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள அனுமதித்து அதற்கேற்றார் போல் வாழ்க்கையை திட்டமிட அனுமதிப்பது. 
  5. ஒரு முறை ஒரு வேலையைச் சரியாக செய்யும் முறையைத் தெரிந்து கொண்ட பின்னர் அதை வேறு வழியில் செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 
  6. ஜெர்மனியர், மக்கள், இடம் மற்றும் பொருட்களைத் தெளிவான வரையறையுடன் பராமரித்தல் முறையான மற்றும் கட்டமைப்புடன் கூடிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றனர். 
  7. பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தெளிவாகப் பிரிக்கப்பட்டவை.
  8. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தகுந்த நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். வர்த்தக நாள் முடிவடைந்த பின்னர், நீங்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு எதிர்பார்க்கப்படுகிறீர்கள். வழக்கமாக முடிவடையும் நேரத்திற்குப் பின்னரும் பணியாற்றுவது விரும்புவது, எளிமையாக நீங்கள் உங்கள் நாளை சரியாகத் திட்டமிடவில்லை என்பதைக் குறிக்கும். 

ஜெர்மனிய வீடு

  1. ஜெர்மனியர்கள் தங்கள் வீட்டைக் குறித்து பெருமிதம் அடைபவர்கள்.
  2. அவர்கள் தங்கள் வீட்டை பெரும்பாலான நேரங்களில் சுத்தமாகவும் முறையாகவும் அந்தந்தப் பொருட்கள் அதற்கான இடத்தில் இருக்குமாறும் வைத்திருப்பர். 
  3. பெரும்பாலான தகவல் தொடர்பு சம்பிரதாயமாக இருக்கும் கலாச்சாரத்தினிடையே, வீடு ஒன்றே ஒருவர் ஓய்வாகவும் தங்கள் தனித்தன்மையை வெளிகொணரும் இடமாகவும் விளங்கும். 
  4. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே வீட்டிற்குள்ளே அழைத்துச் செல்லப்படும் கலாச்சாரம் என்பதால், வீட்டில் மட்டுமே சாதாரணமான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். 
  5. ஒருவரின் வீட்டைச் சுற்றிய இடங்கள் குறித்து பல எழுத்தப்படாத விதிமுறைகள் பின்பற்றப்படும். 
  6. சாலையை ஒட்டிய நடைபாதைகள், தளங்கள், வராந்தாக்கள் (குடியிருப்புகளில்) மற்றும் படிக்கட்டுகள் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும்.


ஜெர்மனிய பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் 

சந்திப்புப் பண்பாடு

  1. வணக்கம் தெரிவிப்பது சம்பிரதாயமானது.
  2. விரைவான, உறுதியான கைகுலுக்கல் பாரம்பரியமாக வணக்கம் தெரிவிக்கும் வழக்கமாகும்.
  3. திரு அல்லது திருமதி போன்ற அடைமொழிகள் மிகவும் அவசியமானவை மற்றும் மரியாதையை தெரிவிப்பவை. தனிப்பட்ட ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்க அனுமதி அளித்தாலின்றி அவரது பெயரை அடைமொழி மற்றும் குடும்பப் பெயர் உபயோகித்து மட்டுமே அழைக்க வேண்டும். ஒருவர் கட்டாயமாக   Herr அல்லது Frau என்று கூறி ஒருவரின் அடைமொழி மற்றும் குடும்பப் பெயரிட்டு அழைக்க வேண்டும். 
  4. பொதுவாக, உங்களை விருந்திற்கு அழைத்தவர், உங்களை கூட்டத்தில் உள்ள பிறருக்கு அறிமுகப்படுத்தும் வரைக் காத்திருக்க வேண்டும். 
  5. ஒரு இடத்திற்குள் நுழையும் போது, குழந்தைகள் உட்பட்ட அனைவரைக்கும் தனித்தனியே வணக்கம் தெரிவிக்க வேண்டும். 

பரிசளிக்கும் பண்பாடு

  1. நீங்கள் ஒரு ஜெர்மனியரின் வீட்டிற்கு அழைக்கப்படும் போது, சாக்லேட்டுகள் அல்லது பூக்களைப் பரிசாகக் கொண்டுச் செல்ல வேண்டும். 
  2. மஞ்சள் ரோஜாக்கள் அல்லது டீ ரோஜாக்கள் எப்போதும் சிறந்த வரவேற்பாகக் கருதப்படுகின்றன. 
  3. சிவப்பு ரோஜாக்கள், காதல் உணர்வை குறிப்பவை என்பதால், அவைகள் கொடுக்கப்படக்கூடாது. 
  4. கார்னேஷன் மலர்கள் சோகத்தைக் குறிப்பதால் அவைகள் கொடுக்கப்படக்கூடாது.
  5. லில்லி மற்றும் சாமந்தி மலர்கள் இறுதி சடங்கின் போது பயன்படுத்தப்படுவதால், அவைகள் உபயோகப்படுத்தக் கூடாது. 
  6. வைன் கொண்டு செல்வதானால் அவை ஃப்ரான்ஸ் அல்லது இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். ஜெர்மன் வைன்களைக் கொடுப்பது நல்ல தரமான வைன் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுபவையல்ல. 

பரிசுகள் பொதுவாக கொடுத்தவுடனேயே பிரிக்கப்படும்.

உணவருந்தும் பண்பாடு

  1.  நீங்கள் ஒரு ஜெர்மனியரின் வீட்டிற்கு அழைக்கப்படும் போது:
  2. நேரம் தவறாது இருப்பது சரியாகத் திட்டமிடுதலைக் குறிப்பதால், சரியான நேரத்தில் செல்ல வேண்டும். ஒருபோதும் முன் கூட்டிய நேரத்தில் போகக் கூடாது. 
  3. ஒருபோதும், தொலைபேசியில் தெரிவிக்காமல் அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து கால் மணி தாமதமாக செல்லக் கூடாது. 
  4. விருந்துக்கு அழைத்தவரின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அடுத்த நாள் கையால் எழுதப்பட்ட மிகுந்த நன்றியைத் தெரிவிக்கும் குறிப்பை எழுதி அனுப்ப வேண்டும்.

மேசைப் பண்பாடு

  1. அமரும்படி கூறும் வரை நின்றபடி இருக்க வேண்டும். நீங்கள் அமர குறிப்பிட்ட இடம் அளிக்கப்படும். 
  2. மேசை இங்கிதம் நாட்டைச் சார்ந்தது. உணவருந்தும் போது ஃபோர்க்கை இடக்கையாலும் கத்தியை வலக்கையாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். 
  3. விருந்தளிப்பவர் துவங்கினாலின்றி அல்லது யாரேனும் ஒருவர் “guten appetit' (நன்கு உணவருந்தவும்) என்று கூறினாலின்றி உண்ணத் துவங்கக் கூடாது.
  4. வெளிப்புற விருந்துகளில், விருந்தளிப்பவர் தனது தொடையில் நேப்கினை போடும் வரைக் காத்திருந்து பின்னர் நீங்களும் அவ்வாறு செய்யவும்.  
  5. மேசையில் உங்கள் முழங்கைகளை ஊன்றக் கூடாது.
  6. சாலட் உண்ணும் போது லெட்யூசை வெட்டக் கூடாது. கத்தி மற்றும் ஃபோர்க் உபயோகித்து அதனை மடிக்க வேண்டும்.
  7. உணவு மிருதுவாக இருப்பதை உணர்த்தி சமைத்தவரைப் பாராட்டும் வகையில் அமைவதால், முடிந்த வரை அதிகபட்சமான உணவை ஃபோர்க்கால் வெட்டி எடுக்க முயல வேண்டும்.
  8. உங்கள் தட்டில் இருக்கும் அனைத்தையும் முடிக்க வேண்டும். 
  9. ரோல் செய்யப்பட்டவைகள் கையால் பிய்த்து எடுக்க வேண்டும். 
  10. நீங்கள் உணவருந்தி முடித்ததைக் குறிக்க உங்கள் கத்தி மற்றும் ஃபோர்க்கை தட்டின் சரியான பக்கத்திற்கு அருகில் குறுக்கே வைத்து கையை கத்தியின் மேல் வைக்க வேண்டும்.
  11. விருந்தளிப்பவர் முதலில் டோஸ்ட் (சியர்ஸ்) செய்வார். 
  12. கௌரவகிக்கப்பட்ட விருந்தினர் உணவருந்தி முடித்த முன்னர், திருப்பி டோஸ்ட் செய்ய வேண்டும்.
  13. வைனுடன் பொதுவாக சொல்லப்படும் டோஸ்ட் “'Zum Wohl!' (‘நல்லாரோக்கியம்’)
  14. பியருடன் பொதுவாக சொல்லப்படும் டோஸ்ட் ‘'Prost!' (‘நல்லாரோக்கியம்’)

ஜெர்மனியில் வர்த்தகப் பண்பாடு மற்றும் வரைமுறை

உறவுகள் மற்றும் தகவல் தொடர்பு

ஜெர்மானியர்களுக்கு வர்த்தகம் செய்ய தனிப்பட்ட உறவுமுறை தேவையில்லை.

உங்களது கல்வித் தகுதி குறித்தும் உங்கள் நிறுவனம் வர்த்தகத்தில் இருக்கும் காலம் குறித்தும் அவர்கள் ஆர்வம் காண்பிப்பவர்களாக இருப்பர். 

ஜெர்மனியர்கள் அதிகாரம் உடையவர்களுக்கு மிகுந்த மரியாதை காண்பிப்பர். எனவே அவர்களுடன் ஒப்பிடும் போது உங்களது நிலையைப் புரிந்து கொள்வது கட்டாயமாகும். 

ஜெர்மனியர்கள் கதவை திறந்து வைத்துக் கொள்வதில்லை. மக்கள் பெரும்பாலும் கதவை மூடி வைத்து பணியாற்றுவர். நுழைவதற்கு முன்னர் கதவைத் தட்டி உள்ளே அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். 

ஜெர்மனின் தகவல் பரிமாற்றம் சம்பிரதாயமானது. 

வர்த்தக உறவுகளை இணைத்து பராமரிக்க நிலைநாட்டப்பட்ட அடிப்படை விதிகளைப் பின்பற்றுவது முக்கியமாகும். 

மொத்தத்தில், ஜெர்மனியர்கள் மிகைப்படுத்தி பேசுதல், அளவுக்கதிகமான உண்மையாகத் தோற்றமளிக்கும் வாக்குறுதிகள் அல்லது உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவை குறித்து சந்தேகம் அடைபவர்களாவர். 

ஜெர்மனியர்கள் நேரடியாக தேவைப்படுபவைகளை மட்டுமே பேசுபவர்கள். 

முடிவுகளை வெளியிடுவதில் மற்றும் தேர்ந்தெடுத்தல் மற்றும் கலந்துரையாடலின் பதிவேடுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்க மிகச் சிறந்த எழுத்து மொழி இருப்பதை எதிர்பார்ப்பர். 

வர்த்தக சந்திப்புப் பண்பாடு

  1. முன்பதிவுகள் கட்டாயமானது மற்றும் அவை 2 வாரங்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டியவை. 
  2. கடிதங்கள் பயன்படுத்தப்படும் இடத்தில் உயர்பதவியிலுள்ள அதிகாரிக்கு, அவரது பெயர் மற்றும் தகுந்த பதவியின் பெயர் உட்படுத்தப்பட்டு, எழுதப்பட வேண்டும் 
  3. ஒரு கூட்டத்தை நடத்த கடிதம் எழுதுவதானால், அது ஜெர்மனில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 
  4. நேரம் தவறாமை மிகவும் தீவிரமாகக் கருதப்படுவது. நீங்கள் தாமதம் ஏற்படலாம் என்று நினைத்தால், உடனடியாக தொலைபேசியில், அழைத்து அதற்கான தகுந்த காரணத்தை ஆதாரத்துடன் அளிக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் கூட்டத்தை இரத்து செய்தல் மிகவும் நாகரீகமற்றதாக கருதப்பட்டு, உங்கள் வர்த்தகத் தொடர்பை இடருக்கு உள்ளாக்கும். 
  5. கூட்டங்கள் பொதுவாகவே அலுவலக சம்பிரதாயங்களுக்குட்பட்டவை.
  6. ஆரம்பக் கூட்டங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக நடத்தப்படுபவை. அவர்கள் நீங்கள் நம்பகமானவர் என்று நம்பினால், உங்கள் ஜெர்மன் சக பணியாளரை உங்களுடன் பணி புரிய அனுமதிப்பர். 
  7. கூட்டங்கள் துவங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களுடன் கண்டிப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி நடத்தப்படும்.
  8. பேசும் போது நேரடியாக கண்ணைப் பார்த்து பேச வேண்டும்., 
  9. ஆங்கிலமும் பேசப்பட்டாலும், ஏதேனும் குழப்பங்களைத் தவிர்க்க மொழிபெயர்பாளரை பணிக்கு அமர்த்துவது நல்ல யோசனையாகும்.
  10. கூட்டத்தின் முடிவில், சில ஜெர்மனியர்கள் மேசையின் மேல் தங்கள் விரல் முட்டிகளால் தட்டி தங்கள் ஒப்புதலைத் தெரிவிப்பர். 
  11. ஒரு அறைக்குள் நுழையும் போது கடுமையான விதிமுறைகள் பின்பற்றும்படி இருக்கலாம். 
  12.  வயதில் மூத்த அல்லது பெரிய பதவிப் பொறுப்பு வகிப்பவர் முதலில் இடத்திற்குள் நுழைவர். 
  13. வயது மற்றும் பொறுப்பு சமமாக இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு முன்னர் ஆண்கள் நுழைவர்.

வர்த்தக ஒப்பந்தம்

  1. உள்ளே அழைக்கப்பட்டு எங்கு அமர வேண்டும் என்று சொல்லப்படும் வரை உட்காரக் கூடாது. 
  2. சந்திப்புகள் துவங்கும் மற்றும் முடிவடையும் நேரங்கள் உட்பட நிகழ்ச்சி நிரலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  3. கூட்டத்திற்குத் தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்த வேண்டும். 
  4. ஜெர்மனி கடுமையான கட்டுப்பாட்டிற்கு உட்பட்து மற்றும் மிகுந்த அதிகாரா ஆட்சிப் போக்குடையது. 
  5. ஜெர்மனியர்கள் நேரடியாக வர்த்தகத்தில் இறங்குவதை விரும்புவர் மற்றும் பேச்சு வார்த்தை மிகக் குறைவாக இருப்பதையே விரும்புவர். அவர்கள் உங்கள் சான்று ஆவணங்களில் ஆர்வம் காண்பிப்பர். 
  6. உங்கள் பதிப்பிக்கப்பட்ட விவரங்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  7. ஒப்பந்தங்கள் கடுமையாக பின்பற்றப்படும். 
  8. நீங்கள் செய்வதற்கு எதுவுமில்லை என்பது போலவும் கடுமையான விதிமுறைகளினால்  எரிச்சலடைவது போலவும் தோற்றமளிக்கக் கூடாது, ஜெர்மனியர்கள் நுணுக்கமாக விவரங்களை அறிந்து கொள்ளும் இயல்புடையவர்கள் ஒப்பந்தத்திற்கு வரும் முன்னர் மறைந்திருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவர். 
  9. வர்த்தகம் படிநிலையானது. முடிவெடுத்தல் கூட்டாண்மையின் உயர் பதவிப் பொறுப்பில் இருப்பவர் இறுதி முடிவை எடுப்பார். 
  10. இறுதி முடிவுகள் நெறி தவறாத, விரிவான செயல்பாட்டு படிகளாக மாற்றப்பட்டு கடிதத்தில் நிர்வகிக்கப்படும் விதத்தில் இருப்பதை நீங்கள் எதிர்நோக்கலாம். 
  11. எதிர்ப்பது போன்ற நடத்தை அல்லது அதிக அழுத்தம் தரும் யுக்தியைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும். இது பெரும்பாலும் பலனளிக்காத ஒன்றாகும். 
  12. தேர்வு ஒரு முறை முடிவாகிய பின்னர் மாற்ற முடியாதது.

நிர்வாகம்

இந்தப் பகுதி குறித்த மேலும் விவரங்களுக்கு எங்கள் ஜெர்மன் நிர்வாக கலாச்சார வழிகாட்டியைப் படிக்கவும். 

உடைப் பண்பாடு

  1. வர்த்தக உடை அடக்கமானது, சம்பிரதாயமானது மற்றும் பழமை மாறாதது.
  2. ஆண்கள் அடர்ந்த நிற, பழமை மாறாத வர்த்தக சூட்களை அணிய வேண்டும். 
  3. பெண்கள் வர்த்தக சூட்கள் அணிய வேண்டும் அல்லது பழமை மாறாத உடைகள் அணிய வேண்டும்.
  4. பகட்டான நகைகள் அல்லது அணிகலன்களை அணியக் கூடாது. 

பயணம்


பல ஜெர்மனியர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்காக விடுமுறை எடுத்துக் கொள்வது வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாகக் கருதுபவர்கள். ஐரோப்பாவின் பிற நாடுகளை விட ஜெர்மனியர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் அதிக பணம் செலவழிப்பவர்கள். 

ஜெர்மனியர்கள், மிக விசேஷமான விடுமுறை இடங்களாக கருதுவது இத்தாலி, ஸ்பெயின், மற்றும் ஆஸ்ட்ரியா ஆகியவைகளாகும். ஒன்பது நாடுகளுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த நாட்டிற்கு நன்றி உரித்தாகுக.

உணவு மற்றும் பானங்கள்

ஜெர்மன் உணவுக் கலாச்சாரம் மனமுவந்து தயாரிக்கப்படும் உணவைக் குறிப்பவை. ஜெர்மனியில் இறைச்சி  மிகவும் பிரபலமானது மற்றும் ரொட்டி மற்றும் உருளைக்கிழங்குடன் பெரும்பாலும் உண்ணப்படுவது. ஜெர்மன் உணவு, ரௌலடென். ஜெர்மன் நூடில்ஸ் மற்றும் ஷ்னிட்ஸெல் ஆகிய தேசிய உணவு வகைகள் உட்பட்டவை. 

தினசரி அடிப்படையில் சமைக்கப்படும் காலை உணவு, சமைக்கப்படும் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ப்ரெட், பன்றி இறைச்சி, சீஸ் மற்றும் பதப்படுத்திய காய் ஆகியவை பொதுவாக உட்கொள்ளப்படும். வெளியில் சென்று உணவருந்துவது பிரபலமானது மற்றும் நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் பல்வேறு போஷாக்கு உணவகங்கள், அடுமனைகள் (ஜெர்மன் மற்றும் துருக்கி), டெலி உணவகங்கள், ஜெர்மன் மற்றும் பன்னாட்டு உணவு வகை உணவகங்கள் (பெரிய நகரங்களில் அதிகரித்து வருபவை), உணவு சந்தைகள், பாப்-அப்கள் மற்றும் சாலையோர துரித உணவுகள் போன்ற பல்வேறு உணவகங்கள் உள்ளன. 


பாரம்பரிய ஆடைகள்

ஜெர்மனியின் பாரம்பரிய உடை உலகப் புகழ் பெற்ற, முற்காலத்தில் கிராம மக்களால், குறிப்பாக, விவசாய பணி அல்லது உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்பவர்கள் அணிந்து வந்த லெடர்ஹோசன் உட்பட்டது. குட்டையான கைகளுடைய சட்டையின் மேலே முழங்கால் அளவுள்ள ப்ரேஸ்களுடன் கூடிய ரீஸ்கள் கொண்ட லெடர்ஹோஸன், பாரம்பரியமாக பவேரியன் மற்றும் டைரோலியன் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. 

பெண்களின் பாரம்பரியமான உடை, பாடிஸ், பின்னஃபோர் மற்றும் ஸ்கர்ட் உட்பட்ட டிர்ண்டில் ஆகும். 

உள்ளே அணியப்படும் சட்டை பொதுவாக தாழ்ந்த கட் மற்றும் குட்டையான பஃப் செய்யப்பட்ட கைகளைக் கொண்டவைகளாக இருக்கும். தற்காலத்தில், இந்த உடை விவசாயப் பணியாளர்களிடையே காணப்படுவதில்லை, ஆனால் ஊழியர்கள், பீர் திருவிழாக்களின் விருந்துக்கு செல்பவர்களால் அணியப்படுகிறது. 

ஜெர்மனியில் மதங்கள்

ஜெர்மனியில் 65 முதல் 70 சதவிகிதத்தினர் தங்களை கிருஸ்துவர்களாக அடையாளம் கண்டு கொள்கின்றனர் அதில் 29% கத்தோலிக்கர்கள். அங்கு 4.4% முஸ்லிம் சிறுபான்மையினரும் உள்ளனர். 36% பலதரப்பட்டவர்கள் தங்களை எந்த 


மதத்தையும் சார்ந்தவர் அல்லர் அல்லது கிறுஸ்துவ அல்லது முஸ்லிம் மதங்களுக்கு அப்பாற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

இசை

பாரம்பரியமான மற்றும் காதலுணர்ச்சி மிக்க இசையை, தீவிரமான மேற்கத்திய இசையாக மாற்றிய உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய இசையமைப்பாளர்களான பாஷ் மற்றும் பீத்தோவன் இருவரும் ஜெர்மனியிலேயே பிறந்து, இறந்த ஜெர்மனியர்கள். பிற பிரபல இசையமைப்பாளர்கள் ப்ராஹ்ம்ஸ், ஷூபர்ட், ஹேண்டெல், டெலிமான், ஆர்ஃப் போன்றவர்கள் ஆவர். 

தற்காலத்தில், ஜெர்மனி, எலெக்ட்ரானிக் இசை முதல் ஹிப்-ஹாப், ராக் அண்ட் ரோல் உட்பட்ட பல இசைத்                                                                                                                   

திருவிழாக்களின் வீடாக இருக்கிறது. ராக் அண்ட் ரிங் என்பது உலகின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும், இதில் உலகெங்கிலுமுள்ள கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசை விசிறிகள் பங்கேற்கும் ஜெர்மனியின் மிக முக்கியமான திருவிழாவாகும்.

ஜெர்மனியிலுள்ள பல ஓபெரா ஹவுஸ்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்படியாகவும் அமைந்துள்ளன.

கட்டிடக் கலை

இந்த நாடு ஆர்ப்பரிப்பான வரலாறைக் கண்டதன் சுவட அதன் சிறந்த மற்றும் பரந்த கட்டிடக்கலையில் காணப்படுகிறது. ஜெர்மனியின் அரண்மணைகள், கோட்டைகள், கதீட்ரல் எனப்படும் பிரதான தேவாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இதன் கதையைக் கூறுபவைகளாகும். திறந்தவெளி அரங்குகள், ஸ்பாக்கள் மற்றும் ரோமானிய பாலங்கள் தற்போதைய ஜெர்மன் நாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலையையும், இந்தப் பகுதியில் மலர்ந்த நாகரீகத்தையும் வெளிப்படுத்தும் அங்கங்களாக விளங்குகின்றன. புனித மைக்கேலின் அபே கதீட்ரல் போன்ற ரோம சாம்ரஜ்யத்திற்கும் முந்தைய கட்டிடங்கள் 10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றியவை. அதே போல, ரோமானியர் காலத்தில் கட்டப்பட்ட பற்பல தேவாலயங்கள் காலத்தைக் கடந்து இன்று வரை இருந்து வருபவை. 

கொலோன் கதீட்ரலும், பிற கதீட்ரல்களைப் போலவே கோதிக் சகாப்தத்தில் கட்டப்பட்டதாகும். 15 மற்றும் 17ஆம் நூற்றாண்டினிடையே உதித்த மறுமலர்ச்சிக் காலம், ஹைடெல்பெர்க் கோட்டை அல்லது ட்யூகல் லாண்ட்ஷட் ரெசிடன்ஸ் போன்ற கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. 

பரோக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 18ஆம் நூற்றாண்டில் காணப்பட்டது. வர்ட்ஸ்பர்க் ரெஸிடென்ஸ் மற்றும் ஆகஸ்டஸ்பர்க் கோட்டை ஆகியவை காலத்தைக் கடந்து இன்று வரை அதன் அங்கமாக இருந்து வருவதுடன் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகின்றன. 

ட்ரெஸ்டனில் உள்ள செம்பெர் ஓபெரா, ஷ்வெரின் பேலஸ் மற்றும் உம் கதீட்ரல் ஆகியவை வரலாற்று நியதிவாதக் கட்டிடங்களாகும். நவீன சகாப்த கட்டிடங்கள், ஐன்ஸ்டைன் டவர், பெர்லின் மாடர்னிஸம் ஹவுஸிங் எஸ்டேட்ஸ் மற்றும் க்லிவைஸ் ரேடியோ டவர் ஆகியவை அடங்கியவை. 

 ஓவியக்கலை

ஜெர்மன் ஓவியக்கலை மேற்கத்திய கலையின் முக்கியமாக ஸெல்டிக் கலை, கேரோலிங்கியன் கலை மற்றும் ஓட்டோனியன் கலை ஆகியவற்றின் மேம்பாட்டிலும், வடிவமைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


ஜெர்மனி உட்பட்டு ஐரோப்பாவில் ஓவியம் மற்றும் சிற்பங்களில் கோதிக் பாணி மிகவும் பிரபலமானதாகும். 15ஆம் நூற்றாண்டின் சிறப்புக்கூறு ஆல்டர்பீஸ்களைத் திட்டமிடுதலாகும். பரம்பரையாக ஜெர்மன் கலைஞர்கள் ஆராய்ந்து நியோக்ளாஸிஸமில், பரோக் மற்றும் ரோகோகோ பாணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளனர், ரொமாண்டிஸிஸம் ஜெர்மன் கலையின் மற்றொரு முக்கிய அங்கமாகும்.

சில முண்ணனி ஜெர்மன் ஓவியங்கள் ஃப்ரான்ஸ் ஸ்டக்கின் “த சின்” கேஸ்பர் டேவிட் ஃப்ரைட்ரிச்சின் “வாண்டரர் அபௌவ் த ஓஷன் ஃபாக்” அடோல்ஃப் மென்ஸலின் “ஸ்டூடியோ வால்”, ஆல்ப்ரெக்ட் ட்யூர் மற்றும் மத்தியாஸ் க்ருன்வால்ட்டின் “ஹெல்லர் ஆல்டர்பீஸ்” போன்றவைகளாகும். 

இறுதிச்சடங்கு

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு கலாச்சாரத்தின் அங்கமாக இருந்து வருகிறது. ஜெர்மனியில், ஒருவர் இறந்தவுடன் 3 முதல் 4 நாட்கள் வரை இறுதிச்சடங்குகள் நடைபெறும். இறந்தவரின் சுற்றத்தாரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்பர். கருப்பு மற்றும் வயலட் நிற அங்கி அணிந்த பாதிரியார் மற்றும் உதவியாளர்கள் ஈமச்சடங்கின் முதல் நாள் பங்குபெறுவர். 

புதைப்பதற்கு முன்னர், சவப்பெட்டி தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு பாதிரியார் ஆன்மா அமைதியடைய சிறப்பு பிரார்த்தனையைச் சொல்லி சவப்பெட்டியின் மேல் நீரைத் தெளிப்பார். பிறகு மணிகள் அடிக்கப்பட்டு துக்கம் அனுஷ்டிப்பவர்கள் சவப்பெட்டியை மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைகுழிக்குள் வைப்பர். பாதிரியாரின் ஒரு சிறிய உரை மற்றும் பிராத்தனைக்குப் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தங்கள் இறுதிப் பிரியாவிடை செலுத்தி, சவப்பெட்டியை மண்ணால் மூடுவர். 

ஜெர்மனியின் கல்விமுறை

ஜெர்மனியின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்படுபவை – உலக பல்கலைக்கழகங்களில் (ARWU, அதாவது Academic Ranking of World Universities) பயிற்சி வரிசையில் தொடர்ந்து முண்ணணியில் இருந்து வருகிறது, உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதல் நூறில் ஆறும் முதல் இருநூறில் பதினெட்டும் ஜெர்மனியைச் சேர்ந்தவை. இங்கு கல்விக் கற்பதினால் நீங்கள் உலகின் பழமையான மற்றும் மிகுந்த நிலைநாட்டப்பட்ட பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவீர்கள். 

பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்

ஜெர்மனியில், 95 சதவிகித கல்லூரி மாணவர்கள் கல்வி கற்கும்படியாக 400 பொதுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த கல்வி மையங்கள் மாநிலத்தின் பண உதவி பெறப்படுபவை, அதாவது மாணவர்கள் கல்விக் கட்டணம் ஏதும் கட்டத்தேவையில்லை (ஓவ்வொரு செமஸ்டரின் துவக்கத்தில் கட்டப்படும் சிறு நிர்வாகக்  கட்டணம் தவிர்த்து). இங்கு சுமார் அரசு மானியம் பெறாத 120 தனியார் கல்வி மையங்களும் உள்ளன, அவை மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராதவை மற்றும் அவர்களது கல்விக்கட்டணம்

அவர்களாலே நிர்ணயிக்கப்படுபவை)

  1. ஜெர்மன் கற்றுக் கொண்ட பின்னர் வேலை வாய்ப்பு
  2. குடிப்பெயர்வு தீர்வுத் தொடர்பு அலுவலர் 
  3. பன்னாட்டு கலாச்சார திட்ட அதிகாரி
  4. சுற்றுலாத்துறையில் பல பதவிகள்
  5. கலாச்சார அல்லது பன்னாட்டு தழுவல் வல்லுனர்
  6. அரசாங்க விவகார அதிகாரி
  7. அரசாங்க நிறுவனங்கள், வெளி நாட்டு மற்றும் கலாச்சாரத் துறைப் பதவிகள்
  8. மொழிபெயர்ப்பாளர்
  9. சொல்லியல் வல்லுனர்

கல்வியில் பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியர் பொறுப்புகள்

ஜெர்மன் மொழி கற்றிருத்தல் பன்னாட்டு சந்தையில் முக்கியமான தகுதியாகக் கருதப்படுகிறது.

ஏன் லாங்க்மா மொழிகள் பள்ளியில் ஜெர்மன் கற்க வேண்டும்

உலகெங்கிலும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஜெர்மன் மொழியை தாய் மொழியாகப் பேசி வருகிறார்கள் மற்றும் இது ஆங்கிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாக இருக்கிறது. ஜெர்மன் கற்பது ஜெர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும் சுவிட்ஸர்லாந்து மற்றும் உலகில் ஜெர்மனை அரசியல் மொழியாக கருதும் நாடுகளில் உங்களுக்கு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கக் கூடியது. 

இத்தாலி மற்றும் போலந்து போன்ற எதிர்பாராத நாடுகளில் கூட சில பகுதிகளில் ஜெர்மன் பேச்சு வழக்கு இருந்து வருகிறது மற்றும் ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அமெரிக்காவிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜெர்மன் பாடக்கோப்பு மற்றொரு மொழியை கற்கத் தூண்டுவது மட்டுமல்லாமல் ஜெர்மன் பேசுபவர்களுடன் வர்த்தக மற்றும் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

பொதுவாக, ஆங்கிலம், ஃப்ரென்ச் மற்றும் ஸ்பானிஷ் போன்ற பிற மொழிகள் கற்கும் ஆர்வத்தில் ஜெர்மன் நினைவுக்கு வருவதில்லை. இருப்பினும், ஜெர்மனை கற்கப் பலக் காரணங்கள் உள்ளன. இது ஐரோப்பிய யூனியனின் மூன்று முக்கிய மொழிகளில் ஒன்றாகும் மற்றும் ஐரோப்பாவில் பெரும்பாலானவர்களின் தாய்மொழியுமாகும். ஜெர்மனி ஐரோப்பாவின் மிக முக்கியமான பொருளாதாரமாகும். எனவே, ஜெர்மன் பேசுவது பல வர்த்தக வாய்ப்புக்களுக்கு வழிவகுக்கும். ஜெர்மனியில் ஜெர்மனுக்கு, கிட்டத்தட்ட இலவசக் கல்வியளிக்கும் பல சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

ஜெர்மன் பொதுவாக கற்கக் கடினமான மொழியாக விவரிக்கப்படுவது ஆனால், உங்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்திருந்தால் பல சுலபமாக எட்டக் கூடியவை, ஏனெனில் இவை இரண்டுமே ஜெர்மானிய மொழிகளாகும். இவை இரண்டிற்கும் முக்கியமாக சொல் அகராதியில் மிகுந்த ஒற்றுமை இருப்பதால், கற்றலை மிகவும் எளிதாக்குகிறது. மேலும் உங்களுக்கு டச்சு அல்லது ஸ்வீடிஷ் போன்ற மற்றொரு  ஜெர்மானிய மொழி தெரிந்திருப்பது உங்களது  ஜெர்மானிய உச்சரிப்பை எளிதாக்கும். 

எங்களது முக்கிய மற்றும் மாலைநேரப் பாட வகுப்புக்கள் ஜெர்மனை அடித்தளத்திலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பளித்து உங்களுக்கு மிகவும் தேவையான பகுதிகளில் உங்கள் மொழித் திறனை வலிமையாக்குகிறது. தகுந்தப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் அடைய விரும்பும் இலக்கையும் அதன் மூலம் நீங்கள் பூர்த்தி செய்ய விழையும் எதிர்பார்ப்புகளைப் பொருத்தது. உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் உங்களுக்கு மிகவும் பொருந்தும் பாடப்பிரிவைக் கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குகிறோம். உங்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களின் உதவியுடன் அனைத்து பாடப்பிரிவுகளிலும் நாங்கள் அழுத்தமற்ற கற்கும் சூழலை அளிக்கிறோம்.  நீங்கள் எங்களுடன் சேர்வதை எதிர்பார்க்கிறோம்!

நாங்கள் முறையாக, சிறு குழுக்களுக்கான அடிப்படை பாடங்களையும், முக்கிய பாடப் பிரிவுகளையும் மாலை நேர வகுப்புகளையும் நடத்துகின்றோம். இந்தப் பாடத்தொகுப்புகள் ஜெர்மனின் மிக முக்கியமான, அதாவது சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணம் முதல் சமூக மற்றும் கலாச்சாரக் கல்வி வரையிலான அம்சங்களில் தேர்ச்சியடைய வைக்கிறது. எங்களின் ஜெர்மன் பாடத்தொகுப்புக்கள், உங்களது தேர்விற்கேற்ப தனிப்பட்ட நேர்முக வகுப்புகளையும் டிஏஎஃப்/DAF மற்றும் டெல்க் சி1 ஹோஷ்ஷூல்/telc CI Hochschule ஆகியவகைகளுக்கான ஆயத்த வகுப்புகளையும் உள்ளடக்கும்.

ஜெர்மன் மொழியின் நிலைகள் யாவை?

ஒரு ஜெர்மன் பாடப்பிரிவை எடுக்க விரும்பும் போது, நீங்கள் தேர்வுகள் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். கீழ்காணும் சில நீங்கள் அடைய நினைக்கும் நிலைகள்:

A1: ஜெர்மன் A1 நிலையில் கற்றுக் கொடுக்கப்படுவது என்ன? அடிப்படை பாடங்கள் 6 நிலைகள், A1 இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தின் அடிப்படைத் தேவைகளை அளிக்கிறது மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற வேலைவாய்ப்பிற்கான கட்டாயத் தேர்வாக இருக்கிறது. பாடத்தொகுப்பு பொதுவாக 4 முதல் 6 வாரங்கள் வரை நடைபெறும். 

A2: முன்னேறி செல்லும் போது A2 நிலையில் மாணவர்கள் மேலும் கடினமான சொற்றொடர்கள் மற்றும் சொற்களஞ்சியங்களை கற்க இயல்வர். இதுவும், 4-6 வாரங்களுக்கான பாடத்தொகுப்பாகும். 

B1: இதில் மேலும் அதிக இலக்கணம் உட்படுத்தப்படும். பெரும்பாலும் தற்போதைய நிகழ்வுகள் குறித்த விரிவான கலந்துரையாடல் நடத்தப்படும். பொதுவாக B1.1 மற்றும் B1.2 என்று பிரிக்கப் பட்ட இந்தப் பாடத் தொகுப்பு 8 வார கால வகுப்பாக இருக்கும். 

B2: ஜெர்மன் B2வைக் கற்க எவ்வளவு நாட்கள் எடுக்கும்? B2வில், மாணவர்கள் மேலும் 8 வாரங்களில் ஜெர்மனை சிறப்பாக எழுதுதல் மற்றும் பேசுதலுக்குத் தேவையான அடிப்படைகளைக் கற்க முயற்சிப்பர். அரசியல், கல்வி மற்றும் பணி குறித்த கருத்துக்கள், பணிகள் அறிமுகப்படுத்தப்படும். மற்றும் சொற்றொடர் அமைப்பு முக்கியத்துவம் பெறும். எனவே, மொத்தத்தில், 1 வருட பாடத் தொகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் 14 முதல் 16 வாரங்களில் B2 நிலையை அடைவர். 

C1: மாணவர்கள் C1 நிலையை மேலும் 8 வாரங்களுக்குப் படிப்பர் மற்றும் சிக்கலான ஜெர்மன் சொற்றொடர்களைப் படித்து ஆழமாகப் புரிந்துகொள்ள இயல்வர். இந்த சான்றிதழுடன் கோதேயை படிப்பது சாத்தியம் எனும் போது, ஜெர்மன் இலக்கியத்தின் அதிசயங்களைப் படித்து அறிய ஏன் முயலக் கூடாது!

C2: மிகச் சிறந்த மாணவர் என்று சான்றிதழ் அளிக்கப்படும் C2 நிலையை முடிக்க நீண்ட நாட்கள் ஆகும். பொதுவாக இது ஆன்லைன் வகுப்புக்களாக கற்பிக்கப்படும். இது கிட்டத்தட்ட பிழையில்லாத ஜெர்மன் மொழித்திறனை அளிக்கும் மற்றும் இது தொழில் வல்லுனர்களுக்கு ஏற்ற பாடத் தேர்வாகும். 

தேர்வுகள்

நீங்கள் எந்த நிலையிலான ஜெர்மன் மொழியைப் படிக்கத் தேர்வு செய்தாலும் எல்லா நிலையிலும் தேர்வுகள் பாடப்பிரிவின் அங்கமாக இருக்கும், இது கேட்பது, பேசுவது மற்றும் எழுதுவது ஆகிய கூறுகளின் கலவையாக இருக்கும். A1 மற்றும் A2 நிலைகளில், கேள்விகள் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் தேர்வுகள் கடினமாக இருக்காது. A2 சற்று ஆழமான கேள்விகளைக் கொண்டிருக்கும் என்பதால் A1 நிலையிலிருந்து சிறிது வேறுபடுகிறது, எனவே இதில் அதிக சொற்களைக் கொண்ட நீண்ட வாக்கியங்களைக் பயன்படுத்த வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும். B1 மட்டத்தில், மாணவர்கள் 2,000 க்கும் மேற்பட்ட சொற்களை அறிந்திருக்க வேண்டும், உட்பிரிவுகள் பற்றிய அறிவு, தொடரியல் பற்றிய வலுவான புரிதல் இருக்க வேண்டும் அத்துடன் TV அல்லது திரைப்பட வேகத்தில் ஜெர்மன் மொழியை பேசும், அறியும் திறன் தேவைப்படும்.

B2 நிலையானது B1 உடன் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் ஜெர்மன் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் வலுவான முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஜெர்மன் கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு இங்கு உதவக்கூடும், எனவே தேவையான துல்லியத்தன்மையைக் கொண்டிருப்பது முக்கியமானதாகக் கருதப்படும்.

C1 நிலையில் ஜெர்மனில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிய வேண்டும், எனவே இந்த நிலையில் போது நீங்கள் ஜெர்மன் மொழியில் தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியாக, C2 நிலையானது C1 மாணவர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது, விரிவான கட்டுரைகளை உருவாக்கத் தெரிவதுடன் ஜெர்மனில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும், எனவே இந்த நிலையில் போது நீங்கள் ஜெர்மன் மொழியில் புலமைப்பெற்றிருக்க வேண்டும்.

லாங்மா ஆன்லைன் ஜெர்மன் மொழி பயிற்சிகள்

  1. ஜெர்மன் வகுப்புகள் தொடர்பான மிக முக்கியமான தகவல்களின் சுருக்கம் இங்கே உள்ளன:
  2. லாங்மா மொழி பள்ளியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நேரடியாக கற்பிக்கப்படுகின்றன.
  3. முக்கிய பாடப்பிரிவுகளுக்கான நிரூபணம் பெற்ற பாடத்திட்டம் மற்றும் பயிற்சி மெட்டீரியல்கள்
  4. அனைத்து திறன்களும் - பேசுதல், எழுதுதல், வாசித்தல், கவனித்தல் மற்றும் இலக்கணம் - ஆகியவையும் ஆன்லைன் ஜெர்மன் மொழி பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன.
  5. பாடங்கள் மற்றும் குழுப் பணிகளுக்கான மெய்நிகர் அறைகளைக் கொண்ட சக்திவாய்ந்த கற்றல் தளம்.

பல்வேறு நிலையிலான ஜெர்மன் மொழியைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கான பல்வேறு நேரங்களில் பல்வேறு பாடத் திட்டங்களைக் கொண்ட வகுப்புகள். இது ஜெர்மனியைப் பார்வையிட முடியாத மாணவர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள உதவுகிறது அல்லது லாங்மா மொழிப் பள்ளியில் ஒரு ஜெர்மன் பாடதிட்டத்தை நிறைவுசெய்த பிறகு தொடர்ந்து ஜெர்மன் கற்க விரும்புவோருக்கு அவர்களின் வீட்டிலிருந்தே உயர்தர ஜெர்மன் மொழி கற்க உதவுகிறது.

முக்கிய  ஜெர்மன் பாடங்கள்

முக்கிய  ஜெர்மன் பாடங்களானது வாரத்திற்கு 45 நிமிடங்கள் என்ற வீதம் 30 பாடங்களை உள்ளடக்கி திங்கள் முதல் வெள்ளி வரை கற்பிக்கப்படுகிறது. திறன்மிக்க வகுப்புகளானது மொழி பயிற்சியின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது (வாசித்தல், கேட்டல், பேசுதல், எழுதுதல் மற்றும் இலக்கணம்). அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட சுமார் 10 மாணவர்களைக் கொண்ட சிறிய முக்கியத்துவம் வாய்ந்த வகுப்புகளையும் வழங்குகிறோம். இந்த முறையில், மாணவர்கள் தங்கள் ஜெர்மன் மொழித்திறனை விரைவாக மேம்படுத்த முடியும்.

இந்த முக்கிய வகுப்புகள் பெரும்பாலும் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முன்பதிவு செய்யப்படுகின்றன. 10 வார காலம் கொண்ட நீண்ட கால வகுப்புகளுக்கு, நாங்கள் குறைந்த பாடக் கட்டணங்களை வழங்குகிறோம். A1, A2 மற்றும் B1 நிலைகளுக்கான ஜெர்மன் வகுப்புகள் ஒவ்வொன்றும் 5 வாரங்கள் நீடிக்கும். B2, C1 மற்றும் C2 நிலைகளுக்கான ஜெர்மன் வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் 10 வாரங்கள் வரை நீட்டிக்கும். இந்தப் பக்கத்தின் கீழே உள்ள “முக்கிய வகுப்புகள்” என்ற டேபில் உங்கள் தேவைகளுடன் பொருந்தும் பாடத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும். 

தனிப்பட்ட முறையிலான முக்கிய வகுப்புகள்

தனிப்பட்ட முறையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்கள் வாரத்திற்கு 45 நிமிடங்கள் என்ற வீதத்தில் 25, 30 அல்லது 40 பாடங்களிலிருந்து தேர்வு செய்யலாம். பாடநெறி உள்ளடக்கமானது ஒவ்வொரு பாடநெறி பங்கேற்பாளரின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டுள்ளது, மேலும் வணிக ஜெர்மன் போன்ற பொதுவான குறிப்பிட்ட தலைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலான வகுப்புகள் பெரும்பாலும் 1 வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு இருக்கும்.

லாங்மா மொழிப் பள்ளியில், ஜெர்மன் மொழி படிப்புகள் பகுதிநேர வகுப்புகளாகவும் எடுக்கப்படுகின்றன. வாரத்திற்கு 6 பாடங்களைக் கொண்டிருக்கும் மாலை ஜெர்மன் வகுப்புகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமை எடுக்கப்படும் ஜெர்மன் வகுப்புகள் 5 பாடங்களைக் கொண்டிருக்கும். முழுநேரம் வேலை செய்யும் போது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ளும் விரும்பும் மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்புகள் பொருத்தமானதாக இருக்கும். ஜெர்மன் மொழி நிலைகளான A1, A2, B1, B2, C1 மற்றும் C2 க்கு 2 பகுதிநேர வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

கற்றல் விளைவுகள்
  1. உங்கள் கண்ணோட்டங்களை வெளிப்படுத்தலாம், வாக்கிய கட்டமைப்புகளை உருவாக்கும் திறனுடன் ஜெர்மன் மொழியில் நம்பிக்கையுடன் உரையாடலாம்.
  2. CEFR இன் ((Common European Framework of Reference for Languages) B2 நிலை அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
  3. பயிற்சி நோக்கங்களுக்காக மொழியைப் பயன்படுத்தலாம், எ.கா. கட்டுரை எழுதுதல், வகுப்பு விளக்கக்காட்சி மற்றும் ஜெர்மன் மற்றும் தொடர்புடைய கலாச்சாரங்களுடன் தொடர்புடைய ஆராய்ச்சி
  4. ஜெர்மன் உரையாடல் கலாச்சாரங்களின் அடிப்படையில் ஜெர்மன் இலக்கிய நூல்கள், திரைப்படங்கள் மற்றும் பலவிதமான பிரிண்ட், காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைப் படிக்கலாம், புரிந்து கொள்ளலாம், பகுப்பாய்வு செய்யலாம்
  5. ஜெர்மன் பேசும் நாடுகளின் நாகரீக வரலாறு பற்றிய புரிதலை எடுத்துரைக்கலாம் 
+91 9810117094