கனடாவில் நிறைவான வாழ்க்கையை வாழ ஆங்கிலம் ஒரு அடிப்படை அம்சமாக விளங்குகிறது

கனடாவில் நிறைவான வாழ்க்கையை வாழ ஆங்கிலம் ஒரு அடிப்படை அம்சமாக விளங்குகிறது

Blog Single
உலகெங்கிலும் ஆங்கில மொழி எவ்வாறு பரவியுள்ளது என்பதை நம்மால் எளிதில் உணர முடியும். பல சர்வதேச பல்கலைக்கழகங்கள், சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் பயணிகள் ஆங்கிலத்தைத் தங்கள் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகின்றனர். இந்த மொழிச் சிக்கல் மிகுந்த கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும் கூட, ஊடகங்கள், ஹோட்டல் தொழில்கள், வர்த்தகம் போன்ற ஒவ்வொரு துறையிலும் இந்த மொழி ஒரு முக்கிய அடையாளத்தைப் பொறித்திருக்கிறது. 

கனடா என்னும் நாடு, உலகம் முழுவதிலுமிருந்தும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியுள்ளது, ஆய்வறிக்கையின் படி 7.5 மில்லியன் நபர்கள் இந்த நாட்டிற்குள் புலம்பெயர்ந்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளும் இந்த நாட்டின் அலுவலக மொழிகளாகும், ஆனால் இங்குள்ள பெரும்பாலானவர்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும், இந்த மொழிகள் அவர்களின் தாய்மொழியாக இருப்பதில்லை. இது அந்நாட்டின் மூத்த பூர்வக்குடிகளில் தொடங்கி பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனிகள் வரை அதன் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வளமான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. பலர் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர் இந்த மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தைக் கற்க நிறைய நேரத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த நாட்டிற்குள் புலம்பெயர்வதற்கு முன்னர் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு முக்கியமான செயல்முறையாகக் கருதப்படுகிறது, இது புதியவர்களுக்கு வேலை தேடவும், மற்றவர்களுடன் பழகுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், பயணம் செய்வது போன்றவற்றுக்கும் உதவுகிறது. நீங்கள் நன்கு ஆங்கிலம் அறிந்திருந்தால், அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது உங்களுக்குத் பணி ரீதியாக வளர உதவுவது மட்டுமல்லாமல், ஒரு தனிநபராகத் தனிப்பட்ட முறையில் வளரவும் சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தும். 

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 29.97 மில்லியன் கனட நாட்டு மக்கள் தங்களை ஆங்கிலம் அறிந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 75 சதவிகிதம் அல்லது 26 மில்லியனுக்கும் அதிகமான கனட நாட்டு மக்கள் தங்களின் முதல் அலுவலக மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதன் மொத்த மக்கள் தொகையில் 20,193,340 கனட நாட்டு மக்கள், ஆங்கிலம் அவர்களின் தாய்மொழிகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கிலம் அறியாமல் ஒரு உத்வேகமான, மகிழ்ச்சியான கனட நாட்டு உறுப்பினராக இருப்பது கடினமாக ஒன்றாகும். டொராண்டோ, மாண்ட்ரீல் அல்லது வான்கூவர் போன்ற நகரங்களில் உள்ள பல நெருக்கமான குழுக்களிலும் தங்கள் சொந்த சமூகங்களிலும் செழித்து வளரும் ஏராளமான புதிய நபர்கள் இருந்தாலும், இவர்களுக்கு மற்ற கனட நாட்டவர்களைப் போலவே எல்லா வாய்ப்புகளும் கிடைக்காது. 

திறம்பட ஆங்கிலம் பேசுவதன் வாயிலாகப் புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது. வலுவான ஆங்கில புலமை கொண்ட புதியவர்களுக்குத் தங்களுக்கு விருப்பமான துறைகள் தொடர்பான வேலைகளைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்பு குறிப்பிட்டது போல, ஒருவர் ஆங்கில மொழியைப் போதுமான அறிவு அறியாதிருந்தால், அவருக்குத் தொழில்முறை ரீதியாக மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். மொழி, சமூகத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களின் மொழியை அறிவது நல்லது. இது சமூகங்களில் உள்ளவர்களுடன் முறையாக உரையாடலை மேற்கொள்ளவதுடன், அவர்களுடன் தொடர்புகொள்வது அல்லது அவர்களுடன் உரையாடுவது மக்கள் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். ஒரு நபர் சமூகத்தில் அல்லது சமுதாயத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கவும் இது வழிவகுக்கும்.

மொழி திறன்களின் முக்கியத்துவம்:

நீங்கள் கனடாவில் குடியேற உதவ, ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழித் திறன் மிகவும் முக்கியமானதாகும். எனவே ஏதேனும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் அல்லது மேம்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த இரண்டு மொழிகளுள் எதைப் பேசுகிறார்கள் என்பதைச் சார்ந்துள்ளது. நீங்கள் வலுவான ஆங்கிலத் திறன்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில், எளிதாக கனட நாட்டுக் குடியுரிமையைப் பெறலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு உத்தியோகபூர்வ மொழியை அறிவீர்களேயானால், மற்றொன்றைக் கற்றுக்கொள்வது பற்றிச் சிந்தியுங்கள். கனடாவின் பல பகுதிகளில், இரண்டையும் பேசுவது வேலையைப் பெறுவதற்கும் உங்கள் சமூகத்தின் அங்கமாகத் திகழ்வதற்கும் பெரிதும் உதவும். இரு மொழிகளையும் அறிவது உங்களது பணிரீதியான மற்றும் தனிப்பட்ட வட்டத்தை அதிகரிப்பதுடன், அங்கேயுள்ள சர்வதேச மக்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.

பணிக்கான மொழித் திறன்:

நீங்கள் குடியேற தகுதியுடையவராக இருக்க, ஆங்கிலம் அல்லது பிரஞ்சு திறன்கள் மட்டுமே போதுமானதல்ல, உங்கள் துறையில் பணியாற்றுவதற்கான திறனையும் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான பணிகளுக்கு இந்த மொழிகளை நீங்கள் சரளமாகப் பேசுவதுடன், பணித் தொடர்பான வலுவான அறிவையும் கொண்டிருக்க வேண்டும், கனடாவில் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சில வாக்கியங்கள்  அல்லது சொற்றொடர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 

கனடாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் ஏதேனும் ஒன்று பேச்சு வழக்கில் இருப்பதால், வாக்கியங்கள், சொற்கள் அல்லது சொற்றொடர்களின் பயன்பாட்டில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன, பணி நோக்கத்திற்காக இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்த நபர் இந்த வேறுபாடுகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் குடியேறுவதற்கான அடிப்படைத் தேவைகளில் ஆங்கிலமும் ஒன்று என்பதால், அதற்கென சில தேர்வுகள் உள்ளன, அவற்றின் மூலம் குறிப்பிட்ட மொழியில் சரளமாகப் பேச முடியும் என்பதற்கான சான்றிதழ்களைப் பெறலாம்.

மொழித் தொடர்பான பல்வேறு சோதனைகள் உள்ளன, பின்வருவன அவற்றில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை:
1.சர்வதேச ஆங்கில மொழிச் சோதனை முறை (IELTS)
2.கனட நாட்டு ஆங்கில மொழிப் புலமை குறியீட்டுத் திட்டம் (CELPIP)
3.வெளிநாட்டு மொழி அடிப்படையிலான ஆங்கிலச் சோதனை (TOEFL) (பொதுவாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இது தேவைப்படுகிறது)

கனடாவானது உலகின் முன்னணி வணிக நாடுகளில் ஒன்றாக இருப்பதால், கனடாவின் வணிக மொழியாக ஆங்கிலம் உள்ளது. இது அதிக ஆதிக்கம் செலுத்தும் மொழியாகும், மேலும் மக்கள் அதை அறிந்திருப்பது அதீத தேவையாக மாறியுள்ளது.  இது உலகளாவிய தொழிலாளர் அமைப்பில் நுழைவதற்கான முதன்மை தேவையாகும். Airbus, Fast Retailing, Nokia, Renault, Samsung, SAP, Technicolor மற்றும் Microsoft போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஆங்கிலத்தை அவர்களின் அதிகாரப்பூர்வ நிறுவன மொழியாகக் குறிப்பிட்டுள்ளன. கூடுதலாக, 2010-ஆம் ஆண்டு Amazon மற்றும் eBay போன்ற நிறுவனங்களும் ஜப்பானிய நிறுவனமான Rakuten கூட, அவர்களின் 7,100 ஜப்பானிய ஊழியர்களுக்கு ஆங்கிலம் கற்பதைக் கட்டாயமாக்கியது.

சர்வதேச சந்தையில், குறிப்பாக கனடா போன்ற நாட்டில் ஆங்கிலம் கற்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவோ மறுக்கவோ முடியாது, ஏனெனில் ஆங்கிலம் கற்பது,  உங்கள் வாழ்க்கையை உண்மையில் மாற்றும் திறன் கொண்டது. ஆங்கிலம் பேசும் திறன் மூலமாகப் புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது. வலுவான ஆங்கிலத் திறன் கொண்ட புதியவர்களும் தங்கள் விரும்பும் பணியைக் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

கனடா அரசாங்கம் அனைவருக்கும் இந்தச் சுதந்திரத்தை (சுகாதாரப் பாதுகாப்புக்குச் சமமான அணுகல்) உத்தரவாதம் செய்தாலும், எப்போதும், குறிப்பாகக் கடைசி நிமிடத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கண்டறிவது சாத்தியமானதல்ல. எனவே புதியவர்கள் ஆங்கில மொழித் திறன் மூலமாகச் சுயமாக முன்னேறி பயனடையலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் புலமை  பெற்றிருப்பதால் தனிநபர் தானாக மொழிபெயர்ப்பாளராகவும் இருக்க முடியும், எனவே மொழிபெயர்ப்பாளரின் அவசியத்தைத் தவிர்க்கலாம்,  இது இருமொழிகளை அறிந்திருப்பதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றாகும்.

கனடாவில் நிறைவான வாழ்க்கையை வாழ ஆங்கிலம் ஒரு அடிப்படை அம்சமாக விளங்குகிறது என்பது மிகவும் சரியானது. ஆங்கிலம் கற்றல் என்பது கலாச்சாரம், பின்னணி அல்லது ஒரு தாய்மொழியைக் கைவிடுவதைக் குறிக்காது, இது ஒரு புதிய மற்றும் மதிப்புமிக்க திறனை சேர்ப்பதுதான், இது பெரும்பாலான புதியவர்களின் வாழ்வில் நல்ல வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.

+91 9810117094